ஹாக்கி

ஆசிய கோப்பை : ஓமன் செல்லும் இந்திய மகளிர் ஹாக்கி அணி..!

18 பேர் கொண்ட மகளிர் அணி ஓமனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது

டெல்லி

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 21 முதல் 28-ஆம் தேதி வரை ஓமனில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க 18 பேர் கொண்ட மகளிர் அணி ஓமனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

நடப்பு சாம்பியன் இந்திய அணி சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.

இந்தியா தனது முதல் போட்டியை ஜனவரி 21-ம் தேதி மலேசியாவிற்கு எதிராக விளையாடவுள்ளது.