ஹாக்கி

ஆசிய விளையாட்டு ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா இன்று மோதல்

44 ஆண்டுகளாக தங்கம் வெல்லாத இந்திய அணி, அந்த நீண்ட கால ஏக்கத்துக்கு விடைகொடுக்குமா? என்பதே அனைவரின் பெருத்த எதிர்பார்ப்பாகும்.

டோக்கியோ,

ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு ஆக்கியில் பெண்கள் பிரிவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியனான சீனாவுடன் (மாலை 3.30 மணி) மோதுகிறது. இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றுக்குள் வந்துள்ளதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

ஆசிய விளையாட்டில் 1982-ம் ஆண்டுக்கு பிறகு 44 ஆண்டுகளாக தங்கம் வெல்லாத இந்திய அணி, அந்த நீண்ட கால ஏக்கத்துக்கு விடைகொடுக்குமா? என்பதே அனைவரின் பெருத்த எதிர்பார்ப்பாகும்.

மேலும் இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் அணி 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என் பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT