ககாமிகஹரா
ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் ஆக்கியில் 19-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆக்கி போட்டியின் பி பிரிவில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் அணிகள் விளையாடின. இந்த போட்டியில், இந்திய அணியின் வீராங்கனையான தீபிகா ஷெராவத் (8, 22, 26, 33, 37, 38, 41, 54) ஆகிய நிமிடங்களில் கோல் போட்டார்.
இதில், தீபிகா அடித்த 8 கோல்களில், அவருக்கு கிடைத்த 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றியதும் அடங்கும். இஷிகா சவுத்ரி (11, 42, 54) ஆகிய நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
லால்ரெம்சியாமி மர்ஜோட் (7), இஷிகா (11, 42, 54), பல்ஜீத் கவுர் (12), நேகா (18), நவ்னீத் கவுர் (23, 45), லால்தன்துலுவாங்கி (43, 51) மற்றும் சாக்ஷி ராணா (43) ஆகியோரும் அணிக்காக கோல் அடித்தனர். இதனால், உஸ்பெகிஸ்தான் பெண்கள் அணியை 19-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து, பி பிரிவில் நாளை நடைபெற உள்ள போட்டி ஒன்றில், இந்திய பெண்கள் அணி இந்தோனேசியாவுக்கு எதிராக விளையாடும்.