image courtesy: Hockey India via ANI 
ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!

நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தென் கொரியாவுடன் மோதியது.

போட்செப்ஸ்ட்ரூம்,

9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவுடன் மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்திய அணியில் மும்தாஸ் கான் 11-வது நிமிடத்திலும், லால்ரின்டிகி 15-வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 41-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

மற்றொரு கால்இறுதியில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. நாளை நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

SCROLL FOR NEXT