ஹாக்கி

இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

ஆக்லாந்து,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை கேப்டன் ராணி ராம்பால் 47-வது நிமிடத்தில் அடித்தார். நியூசிலாந்து மேம்பாட்டு அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்