ஹாக்கி

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்தியா - ஸ்காட்லாந்து ஆட்டம் டிரா

அடுத்ததாக இந்தியா, வேல்ஸ் அணியை நாளை சந்திக்க உள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில், இந்திய மகளிர் அணியின் இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்தியாவுக்காக நவ்நீத் கௌர் (18வது நிமிடம்) மற்றும் சுனேலிதா டொப்போ (29வது நிமிடம்) கோல்கள் அடித்தனர். ஸ்காட்லாந்து அணிக்காக ஹீதர் மெக்யுவன் (6வது நிமிடம்) மற்றும் பியோனா பெர்னெட் (33வது நிமிடம்) கோல் பதிவு செய்தனர்.

இந்த முடிவின் மூலம் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இரண்டும் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. இருப்பினும், கோல் வித்தியாசம் காரணமாக இந்தியா பிரிவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இதற்கு முன் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா உருகுவே அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஸ்காட்லாந்து அணி தனது முதல் போட்டியில் வேல்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்ததாக இந்தியா, வேல்ஸ் அணியை நாளை சந்திக்க உள்ளது.