ஹாக்கி

மகளிர் ஆக்கி உலகக் கோப்பை: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா

மகளிர் ஆக்கி உலகக்கோப்பை 2026 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது.

ஆம்ஸ்டல்வீன்,

மகளிர் ஆக்கி உலகக்கோப்பை 2026 தொடரில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 0-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.

தொடக்கத்திலேயே முன்னிலை

மகளிர் ஆக்கி உலகக்கோப்பை 2026 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில், 3-வது நிமிடத்திலேயே நெதர்லாந்து அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. அதை யிபி ஜான்சென் கோலாக மாற்றி நெதர்லாந்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.

2-வது கோல்

தொடர்ந்து ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை பிரெடெரிக் மாட்லா கோலாக மாற்றினார். இதனால் நெதர்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இந்தியா தோல்வி

சலிமா டேட்டே, நவ்நீத் கவுர் உள்ளிட்ட இந்திய வீராங்கனைகளும் கோல் அடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், நெதர்லாந்தின் தடுப்பாட்டத்தை உடைக்க முடியவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

அடுத்த ஆட்டம்

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள, இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.