வாவ்ரே,
உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணி, பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 8-வது இடத்தைப் பிடித்து தனது பயணத்தை நிறைவு செய்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதில் இந்திய அணிக்காக அபிஷேக் ஒரு கோலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்களும் அடித்தாணாற். பெல்ஜியம் அணிக்காக ரோமன் டுவ்கோட், ஹியூகோ லபோஷெரே மற்றும் நிக்கோலஸ் டி கெர்பெல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.
பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணிக்காக ஷிலானந்த் லக்ரா, தில்ப்ரீத் சிங் மற்றும் அபிஷேக் ஆகியோர் கோல் அடித்தனர். இருப்பினும், பெல்ஜியம் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 7-வது இடத்தை கைப்பற்றியது.
ஷூட்-அவுட்டில் வெற்றியைத் தவறவிட்டதால், உலகக் கோப்பை தொடரை 8-வது இடத்துடன் நிறைவு செய்தது இந்திய அணி.