ஹாக்கி

ஆடவர் ஆக்கி உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா

ஆடவர் ஆக்கி உலகக்கோப்பை தொடர் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்டெல்வீன்,

ஆடவர் ஆக்கி உலகக்கோப்பை தொடர் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சீனா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்தியா தோல்வி

இந்நிலையில், ஆடவர் ஆக்கி உலகக்கோப்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின. அரையிறுதிக்குள் நுழைய அர்ஜென்டினாவை 3 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

அரையிறுதி வாய்ப்பு இழப்பு

ஆனால் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியாவை 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது. அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததையடுத்து உலகக்கோப்பை காக்கி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

SCROLL FOR NEXT