ஜலந்தர்,
ஆக்கி இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளர் போலாநாத் சிங் ஜலந்தரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,
2030-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஆக்கி (ஆண்கள் மற்றும் பெண்கள்) போட்டியை நடத்தும் உரிமையை ஆக்கி இந்தியா பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை ஆக்கி போட்டியை நடத்துவதற்கான போட்டியில் ஒடிசா, தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு ஒடிசாவுக்கு கிடைத் தால் அது அந்த மாநிலத்துக்கு ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஒடிசாவுக்கு தான் முன்னுரிமை அளிக்கப் படும். ஆக்கியை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழ்நாடு பல ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கி இருக்கிறது.
அதனால் தான் கடந்த ஆண்டு அங்கு ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை நடத்தினோம். வளமான ஆக்கி பாரம்பரியம் மற்றும் தேசிய அணியில் அந்த மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இடம் பெற்று இருக்கும் காரணத்தால் தான் தற்போது நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த பஞ்சாப்பை தேர்ந்தெடுத்தோம். பெண்கள் ஆசிய கோப்பை போட்டியை மத்தியபிரதேசத்தில் உள்ள போபாலில் நடத்த உள்ளோம். மத்தியபிரதேசத்தில் இதுவரை சர்வதேச ஆக்கி போட்டி நடந்ததில்லை. சர்வதேச தரத்தி லான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில் தான் ஆக்கி போட்டியை நாட்டின் எல்லா பகுதிக்கும் கொண்டு செல்கிறோம். சீனியர் வீரர்கள் ஓய்வு விவகாரத்தில் ஆக்கி இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது. இதே போல் வீரர்கள் தேர்விலும் ஆக்கி இந்தியா நிர்வாகிகள் யாரும் தலையிடுவது இல்லை. நல்ல உடல் தகுதியுடனும், திற மையுடனும் இருக்கும் வீரர்கள் தொடர்ந்து ஆடுவார்கள். அவர்களை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் திற மையற்ற வீரர்களை யாராலும் விளையாட வைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.