ஹாக்கி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே கனவு...கோல் கீப்பர் சவிதா பேட்டி

இந்த ஆண்டு நடந்த பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தோம்.

புதுடெல்லி,

ஜப்பானில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண் கள் ஆக்கி அணி 44 ஆண்டுக்கு பிறகு மகுடம் சூடியதுடன், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கோல் கீப்பர் சவிதா பூனியா இறுதி ஆட்டத்தில் சீனாவின் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை முறியடித்து அசத்தினார்.

அரியானாவைச் சேர்ந்த 36 வயதான சவிதா இந்திய பெண்கள் அணிக்காக அதிக போட்டிகளில் (326 ஆட்டம்) விளையாடிய அனுபவசாலி. அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்த ஆண்டு நடந்த பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தோம். ஆசிய விளையாட்டில் 44 ஆண் டுக்கு பிறகு தங்கப்பதக்கத்தை கைப்பற்றினோம். இப்போது லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கி விட்டதாக உணர்கி றேன். ஒலிம்பிக் பதக்க மேடையில் ஏற வேண்டும் என்பதே எனது கனவு. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக நான் முழுமையாக தயாராகி வருகி றேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏற்பட்ட ஏமாற்றம் (4-வது இடம்) நிச்சயம் அங்கு நீங்கி விடும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சவிதா கூறினார்.

SCROLL FOR NEXT