ஹாக்கி

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா - சீனா இன்று மோதல்

தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது.

போபால்,

6 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிரதேச தலைநகர் போபாலில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தரவரிசை யில் 5-வது இடத்தில் இருக்கும் சீனாவை எதிர்கொள்கிறது. சலிமா டெடி தலையிலான இந்திய அணி, மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து அணிகளை வரிசையாக வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்து விட்ட நிலையில் தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது.

இந்தியா

சீனா 3 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி. ஒரு டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மற்ற ஆட்டங்களில் தென்கொரியா- தாய்லாந்து (பிற்பகல் 2.30 மணி), மலேசியா- ஜப்பான் (மாலை 4.45 மணி) அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT