ஹாக்கி

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வென்ற இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜப்பான்-சீனா , தென்கொரியா-மலேசியா, இந்தியா-தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது.

போபால்,

9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிரதேச தலைநகர் போபாலில் உள்ள சர்வதேச விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, 3 முறை சாம்பியனான தென்கொரியா உள்பட 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக் கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் நேற்று இரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணியில் மும்தாஜ் கான் 30-வது நிமிடத்திலும், சுனிலிதா டாப்போ 34 -வது நிமிடத்திலும் கோலடித்தனர். தென்கொரியா தரப்பில் யோங்குன் ஹோங் 56-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. சீனா-மலேசியா மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜப்பான்-சீனா (பகல் 12.45 மணி), தென்கொரியா-மலேசியா (மாலை 3 மணி), இந்தியா-தாய்லாந்து (மாலை 5.15 மணி) அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT