ஹாக்கி

பெண்கள் ஆக்கி: இந்தியா-அர்ஜென்டினா அணிகள் இன்று மோதல்

சலிமா டெடெ விலகியதால் நவ்னீத் கவுர் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.

பியூனஸ் அயர்ஸ்,

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை ஆக்கி மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி, அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-அர்ஜென்டினா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி பியூனஸ் அயர்சில் இன்று (இரவு 7.30 மணி) நடக்கிறது.

சலிமா டெடெ விலகியதால் நவ்னீத் கவுர் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. அனுபவம் வாய்ந்த கோல்கீப்பரும், முன்னாள் கேப்ட னுமான சவிதா புனியா 10 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரது வருகை இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.