ஆம்ஸ்டெல்வின்,
16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து முதலாவது வெற்றி பெற்றது . பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்திய அணியில் சுனெலிதா (11-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (17-வது நிமிடம்), சுஷிலா சானு (25-வது நிமிடம்), தீபிகா (38-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (44-வது நிமிடம்), சாக்ஷி (45-வது நிமிடம்) கோலடித்தனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் கய்லா டி வால் (55-வது நிமி \டம்) ஆறுதல் கோல் திருப்பினார்.