பிற விளையாட்டு

2036-ம் ஆண்டு ஒலிம்பிக்: இந்தியா உள்பட 7 நாடுகள் விருப்பம்....திட்டங்களை சமர்ப்பிக்க ஐ.ஓ.சி. அழைப்பு

இந்தியா ஒருபோதும் ஒலிம்பிக் போட்டியை நடத்தியதில்லை.

வாஷிங்டன்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 1896-ல் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2024-ம் ஆண்டு பாரீசில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. அதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்க னைகள் பங்கேற்றனர். 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் அமெரிக்காவின் லாஸ்ஏஞ் சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடைபெறுகிறது.

இந்தியா ஒருபோதும் ஒலிம்பிக் போட்டியை நடத்தியதில்லை. 2036-ம் ஆண் டுக்கான 36-வது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே இந்தியாவின் கனவு. அதற்கான முயற்சியை தீவிரமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான உரிமத்தை பெறுவது எப்படி? எந்தெந்த நாடுகள் ஆர்வமாக உள்ளன என்ற விவரத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) தெரிவித்துள்ளது.

ஐ.ஓ.சி. நேற்று வெளியிட்ட அறிக்கையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து. ஐ.ஓ.சி.யுடன் ஜெர்மனி, ஹங்கேரி, இந்தியா, கத்தார், தென்கொரியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதே போல் 2036-க்கு பிந்தைய ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து இப்போதே பல தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் பேச்சுவார்த்தையில் உள்ளன.

ஒலிம்பிக்கை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் நவம்பர் மாதத்தில், தங்கள் திட்டங்களை எதிர்கால போட்டிக்கான ஆணையத்திடம் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 31-ந்தேதிக்கு பிறகு, போட்டியை நடத்த வேறு எந்த நாடுகள் ஆர்வம் காட்டிலும் அது பரிசீலிக்கப்படாது.

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான திட்டங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். போட்டி நடைபெறும் இடம் மற்றும் வசதி வாய்ப்புகள் குறித்த முழுமையான விவரம். விளையாட்டு வீரர்களின் அனுபவம், நிதி ஆதாரம், அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவு, போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான திறன் மற்றும் போட்டியை நடத்தும் நாட்டிற்கு நீண்ட கால பலன் அளிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டம் போன்றவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT