பிற விளையாட்டு

தண்ணீர் என்றாலே பயம்.. நீச்சல் போட்டியில் வெண்கலம் - வீராங்கனையின் ஆச்சரிய பின்னணி

வருடங்கள் செல்ல செல்ல, அதனை நான் நேசிக்க தொடங்கினேன் என்று கூறுகிறார்.

தகார்

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய நீச்சல் வீராங்கனை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நீச்சல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை தினிதி தேசிங்கு பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வரலாற்று சாதனை

இளையோர் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில், பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்த போட்டியில், குரோஷியா நாட்டை சேர்ந்த வீராங்கனை அனா போபானோவிச் (55.89 வினாடிகள்) தங்க பதக்கமும், நியூசிலாந்தின் அலைசா லாசன் (56.13 வினாடிகள்) வெள்ளி பதக்கமும் வென்றனர். தினிதி இந்த சாதனையை படைப்பதற்கு முன், நடப்பு ஆண்டில் 3 முறை தேசிய சாதனையை முறியடித்து இருக்கிறார்.

தண்ணீருக்கு பயம்

கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவரான தினிதி தேசிங்கு, செனகல் நாட்டில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்று தந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நீச்சல் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஆனால், இளம் வயதில் தண்ணீர் என்றாலே தினிதிக்கு பயம். இதனால், நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு பதிலாக பயந்து போய் நீச்சல் உடையுடன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார். இதனை பதக்கம் வென்ற பின்னர் அளித்த பேட்டியின்போது அவர் வெளிப்படுத்தினார். உண்மையில் நான் பயந்து போய் இருந்தேன் என்று எனக்கு தெரியும் என கூறினார்.

கோடை விடுமுறை

அப்போது 6 அல்லது 7 வயது இருக்கும். கோடை கால விடுமுறையில் நீச்சல் குளத்திற்கு நாங்கள் போனோம். ஆனால், எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை. அதனால், நீச்சலுடையுடன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன் என்று கூறுகிறார்.

அதன்பின்னர் நீச்சல் மீது எனக்கு எப்படி ஆர்வம் வந்தது? என உண்மையில், தெரியவில்லை. வருடங்கள் செல்ல செல்ல, அதனை நான் நேசிக்க தொடங்கினேன் என்று கூறுகிறார்.

SCROLL FOR NEXT