பிற விளையாட்டு

7 ஆண்டுகளுக்குப் பின்... 'கோல்டன் டக்' ஆன விராட் கோலி!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நியூ சண்டீகரில் நடைபெற்று வருகிறது.

நியூ சண்டிகர்,

7 ஆண்டுகளுக்கு பிறகு கோல்டன் டக் ஆகி இருக்கிறார் விராட் கோலி.

அதிர்ச்சி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நியூ சண்டீகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்யாத இந்திய அணி, இந்தப் போட்டியில் முதன்முறையாக பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், ஆரம்பத்திலேயே முக்கியமான 2 விக்கெட்டுகளை இழந்தது.

3 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள்

ஜெய்டன் சீல்ஸ் வீசிய பந்தில் சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ‘கோல்டன் டக்’ ஆனார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், கீரன் பொல்லார்ட் பந்துவீச்சில் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருந்தார்.

கோலியின் 4-வது ஒருநாள் ‘கோல்டன் டக்’

ஒருநாள் போட்டிகளில் கோலி ஏற்கனவே 3 முறை ‘கோல்டன் டக்’ ஆன நிலையில், இந்தப் போட்டியுடன் அந்த எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

2011, நார்த் சவுண்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டேரன் சமி பந்துவீச்சில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

2011, தர்மசாலா: இங்கிலாந்துக்கு எதிராக டிம் பிரெஸ்னன் பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

2019, விசாகப்பட்டினம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கீரன் பொல்லார்ட் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார்.

தற்போதைய போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

SCROLL FOR NEXT