பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: 21 தங்கத்துடன் பதக்கப்பட்டியலில் 4ம் இடம் பிடித்த இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது

டோக்கியோ,

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 21 தங்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 4ம் இடம் பிடித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் 46 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை நிறைவடைய உள்ளது. பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நாளை நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்தியா 4ம் இடம்

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 21 தங்கத்துடன் பதக்கப்பட்டியலில் 4ம் இடம் பிடித்துள்ளது.

அதன்படி, ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்து இத்தொடரை நிறைவு செய்துள்ளது.

அதேவேளை, 169 தங்கம், 89 வெள்ளி, 83 வெண்கலம் என 341 பதக்கங்களுடன் பட்டியலில் சீனா முதல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT