பிற விளையாட்டு

டென்னிஸ் தரவரிசையில் புதிய வரலாறு படைத்த ஈலா... உலக அளவில் 17-வது இடத்துக்கு முன்னேற்றம்

ஈலா ஹாங்காங்கில் நடைபெறும் டபிள்யூ.டி.ஏ. 250 தொடரில் களமிறங்குகிறார்.

ஹாங்காங்,

டென்னிஸ் தரவரிசையில் ஈலா புதிய வரலாறு படைத்துள்ளார்.

அலெக்சாண்ட்ரா ஈலா

டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டுள்ள புதிய மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா 17-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் டபிள்யூ.டி.ஏ. தரவரிசை வரலாற்றில் அதிக உயர்ந்த இடத்தைப் பிடித்த பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 21 வயதான ஈலா, கடந்த ஆகஸ்ட் மாதம் 18-வது இடத்தைப் பிடித்ததே இதுவரை அவரது சிறந்த தரவரிசையாக இருந்தது.

முந்தைய சாதனையை முறியடித்தார்

தற்போது 19-வது இடத்தில் இருந்த ஈலா, புதிய தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். ஜப்பானின் நவோமி ஒசாகா 16-வது இடத்திலும், கனடாவின் லேலா பெர்னாண்டஸ் 18-வது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி வரை முன்னேறியதே ஈலாவின் தரவரிசை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் ரஷியாவின் டயானா ஷ்னைடரிடம் தோல்வியடைந்து அவர் வெளியேறினார்.

இந்த ஆண்டில் முதல் பெரிய பட்டம்

இந்த ஆண்டில் வாஷிங்டனில் நடைபெற்ற முபடலா டி.சி. ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஈலாவின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். அந்தத் தொடரில் அவர் தனது முதல் டபிள்யூ.டி.ஏ. 500 பட்டத்தை வென்றார்.

அடுத்த சவால்

இந்த வரலாற்று முன்னேற்றத்தைத் தொடர்ந்து, ஈலா ஹாங்காங்கில் நடைபெறும் டபிள்யூ.டி.ஏ. 250 தொடரில் களமிறங்குகிறார். இதில் இரண்டாம் நிலை வீராங்கனையாக இடம் பெற்றுள்ள அவர், முதல் சுற்றில் அமெரிக்காவின் அலிசியா பார்க்ஸை நாளை (நவம்பர் 3) எதிர்கொள்கிறார்.

SCROLL FOR NEXT