பிற விளையாட்டு

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங் உடன் மோதினார்.

புதுடெல்லி,

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-8, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து ஜப்பானின் ரிகோ உடன் மோத உள்ளார்.

SCROLL FOR NEXT