பிற விளையாட்டு

ஆர்க்டிக் ஓபன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி

இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், டென் மார்க்கின் ஆன்டன்செனிடம் தோற்று நடையை கட்டினார்.

வான்டா,

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் போட்டி பின்லாந்தின் வான்டா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 10-21, 9-21 என்ற நேர்செட்டில் டென் மார்க்கின் ஆன்டன்செனிடம் தோற்று நடையை கட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் தருண் மன்னேபள்ளி 21-16, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாக்னஸ் ஜோஹன்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் தொடக்க சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ணபிரசாத் கார்கா-பிருத்வி கிருஷ்ணமூர்த்தி இணை சரிவில் இருந்து மீண்டு 10-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜி டிங்-ரென் சியாங் யூ ஜோடிக்கு அதிர்ச்சி அளித்தது.

SCROLL FOR NEXT