பிற விளையாட்டு

ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி வெற்றி

இந்திய அணி கஜகஸ்தானை வீழ்த்தியது.

காகமிகஹரா,

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் உள்ள காகமிகஹரா நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 9 அணிகளும், பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் முறையே இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, கஜகஸ்தானை சந்தித்தது. தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்த இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது . இந்திய அணியில் கேப்டன் கேதன் குஷ்வாஹா 3 கோலும், ஷாருக் அலி, பிரகலாத் ராஜ்பார், ஆஷிஷ் தனிபுர்தி, அன்ஷ் பகுத்ரா தலா 2 கோலும் அடித்தனர்.