பிற விளையாட்டு

ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி வெற்றி

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத் தில் நாளை சீன தைபேயை சந்திக்கிறது.

காகமிகஹரா,

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் உள்ள காகமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது ஆட்டத்தில் தென்கொரியாவை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத் திய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது.இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத் தில் நாளை சீன தைபேயை சந்திக்கிறது.

SCROLL FOR NEXT