பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: டேபிள் டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்திய இந்தியா

இந்த வெற்றியால், எப் பிரிவில் 5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.

எய்ச்சி-நகோயா

ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 3-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் எய்ச்சி-நகோயாவில் இன்று மாலை நடந்த ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

முதல் இடத்தில் இந்தியா

இதில், முதல் ஆட்டத்தில் கான் முகமதுவை 11-4, 11-3, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் அப்பாஸ் கானை 11-1, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் வெற்றி பெற்றார்.

3-வது ஆட்டத்தில் கான் முகமதுவை 11-2, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் பயஸ் ஜெயின் வீழ்த்தினார். இந்த வெற்றியால், எப் பிரிவில் 5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஈரான் உள்ளது.

SCROLL FOR NEXT