பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்

சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் பயார் குவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

உலான்பத்தார்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் பயந்தலாவின் பயார் குவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் 50 கிலோ எடைப்பிரிவில் இந் திய வீரர் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் பெக் ஸாட் எர்க்ஷோவை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.