சிட்னி,
21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப் பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பெறும் இரண்டு சிறந்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத் தில் இன்று சீன தைபேயை (பிற்பகல் 2.30 மணி) சிட்னியில் சந்திக்கிறது. இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் வியட்நாம், ஜப்பான் அணி களிடம் அடுத்தடுத்து தோல்வி கண்டு கடைசி இடத்தில் உள்ளது. சீன தைபே அணி ஒரு வெற்றி. ஒரு தோல்வியுடன் (3 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறது.