டோக்கியோ,
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் இந்தியாவின் நீரு, ஆஷிமா அஹலாவத் மற்றும் மனிஷா கீர் கூட்டணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
சீன கூட்டணி 346 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், இந்திய கூட்டணி 328 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், குவைத் மூவர் அணி 325 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர். நீரு 125-க்கு 118 புள்ளிகளையும் ஆஷிமா மற்றும் மனிஷா முறையே 125-க்கு 106 மற்றும் 104 புள்ளிகளையும் பெற்றனர்.