பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி இன்று நிறைவு

வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறும்

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் உள்ள மிசுஹோ பார்க் தடகள ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 19-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இந்த போட்டியில் ஆசிய கண்டத்தை சேர்ந்த 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி னர். இந்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. 43 விளையாட்டுகளில் மொத்தம் 469 பந்தயங்களுக்கான இந்த போட்டியில் குதிரையேற்றத்தில் மட்டும் இரண்டு பந்தயங்கள் மிஞ்சி இருக் கிறது. அவை இன்று காலை அரங்கேறுகிறது. இதில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இதனையடுத்து மாலையில் நிறைவு விழா (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) நடைபெறுகிறது. நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சி கள் அரங்கேறுகிறது. அத்துடன் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறும். அணிவகுப்பில், நடப்பு ஆசிய விளையாட்டில் 3 பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். விழாவின் நிறைவாக அடுத்த ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரி மையை பெற்றுள்ள தோகா (கத்தார்) நகர பிரதிநிதிகளிடம் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொடி முறைப்படி ஒப்படைக்கப் படும். நடப்பு ஆசிய விளையாட்டு பதக்கப்பட்டியலில் சீனா 169 தங்கம் உள்பட 341 பதக்கங்களுடன் முதலிடத்தை தக் கவைத்தது. இந்தியா 21 தங்கம் 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித் துள்ளது. தொடக்கத்தில் பின்தங்கி இருந்த இந்தியா கடைசி 5 நாட்களில் பதக்க வேட்டையில் அசுர வேகத்தில் செயல் பட்டு ஏற்றம் கண்டது. வில்வித்தை.

குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம் ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகளின் அபாரமான செயல்பாடு பதக்கபட்டியலில் டாப்-5 இடத்துக்குள் நுழைய வழிவகுத்தது. கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது. இம்முறையும் அதே இடத்தை பிடித்தாலும் பதக்க எண்ணிக்கை குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT