பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: தொடர் ஓட்டத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது. இந்திய அணியில் டி.எஸ். மனு, எம்.ஆர். போவம்மா, ஜெய் குமார், கிரண் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய அணி பந்தயத்தை 3 நிமிடங்கள் 16.23 வினாடிகளில் நிறைவு செய்தது.

இந்தியா இடம்பெற்ற 2-வது தகுதிச்சுற்றில் சீனா முதலிடம் பிடித்தது. இந்திய அணி 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

இறுதிப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய அணியின் இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இதனால் ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT