டோக்கியோ
ஆசிய விளையாட்டு 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்றைய கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 4 பேர் கொண்ட இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. பூவம்மா ராஜு, விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ் மற்றும் மானு டி.எஸ். ஆகிய 4 பேர் அடங்கிய குழுவினர் சிறப்பாக விளையாடினர்.
விஷால் சிறப்பான தொடக்கம் தந்த பின்னர், ஆட்டம் மீண்டும் இந்தியா பக்கம் திரும்ப பூவம்மா வழிவகை செய்ததும், மனு தொடர்ந்து 3-வது இடத்தில் ஓடினார். இறுதியாக வித்யா ராம்ராஜ் சிறப்பாக ஓடி 2-வது இடம் பிடித்து இந்தியாவுக்கு வெள்ளி வென்று தந்துள்ளார்.
மொத்தம் 3:14.46 நிமிடங்களில் இந்தியா பந்தய இலக்கை அடைந்தது. பஹ்ரைனின் சல்வா ஈத் நசீர் விரைவாக ஓடி அந்த அணி முதல் இடம் பிடிக்க உதவினார். அந்த அணி 3:12.87 நிமிடங்களில் முதல் இடம் பிடித்தது. வியட்னாம் 3:14.54 நிமிடங்களில் பந்தய தொலைவை அடைந்து வெண்கலம் வென்றது.