டோக்கியோ
ஆசிய விளையாட்டு ஆடவர் பேட்மிண்டன் குழு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் பேட்மிண்டன் குழு போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடிய இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. முதலில், அய்மன் இபின் ஜாமனை 21-4, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லக்சயா சென் வெற்றி பெற்றார்.
இந்தியாவுக்கு நல்ல தொடக்கமும் ஏற்படுத்தி கொடுத்த நிலையில், அடுத்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி தன் பங்கிற்கு கவுரப் சிங்காவை 21-4, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதனால், 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி தேவையாக இருந்த நிலையில், கிதம்பி ஸ்ரீகாந்த் அதிரடியாக விளையாடினார். அவர் அல் அமீன் ஜுமாரை 21-15, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனால், இந்திய பேட்மிண்டன் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அதிரடி வெற்றியால் இந்திய அணி இரட்டையர் ஆட்டங்களில் விளையாட வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதனால், நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் ஜப்பானை எதிர்த்து இந்தியா விளையாடும்.