பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: இந்திய மல்யுத்த வீரர் நிதேஷ் வெள்ளி வென்றார்

தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் யுரி நகஜாட்டோ சந்தித்தார்

டோக்கியோ,

ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு திருவிழா இறுதிகட் டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் 4 தங்கப்பதக்கத்தை அள்ளிய இந்தியாவுக்கு போட்டியின் 13-வது நாளான நேற்று சற்று ஏமாற்றமாக அமைந்தது. வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் மட்டுமே நமக்கு சிக்கின.

வில்வித்தையில் காம்பவுண்ட் தனிநபர் அரைஇறுதியில் இந்திய வீரர் கணேஷ் மணிரத்னம் திருமுரு 144-148 என்ற புள்ளி கணக்கில் 4 முறை உலக சாம்பியனான தென்கொரியாவின் கிம் ஜோங்ஹோவிடம் பணிந்தார். தொடர்ந்து நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் கணேஷ் மணிரத் னம் திருமுரு 149-144 என்ற புள்ளி கணக்கில் வியட்நாமின் டேங் காங் டுக்கை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மல்யுத்தத்தில் ஆண்களுக்கான கிரேக்க ரோமன் பிரிவில் நேரடியாக கால்இறுதியில் கால்பதித்த இந்திய வீரா நிதேஷ் சிவாச் (97 கிலோ) தனது முதல் ஆட்டத்தில் 7-1 என்ற கணக்கில் அமன்பெர்டி அகமடோவையும் (துர்க்மெ னிஸ்தான்). அரைஇறுதியில் 9-0 என்ற கணக்கில் கங்பாத்தரையும் (மங்கோ லியா) பந்தாடினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் கிரேக்க ரோமன் பிரிவில் 1962-ம் ஆண்டுக்கு பிறகு இறுதிசுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற அரிய சாதனையை படைத்த நிதேஷ், தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் யுரி நகஜாட்டோ சந்தித்தார். ஆனால் இறுதி சுற்றில் எதிராளியின் பிடியில் இருந்து மீள முடியாமல் திணறிய அரி யானாவைச் சேர்ந்த நிதேஷ் 0-4 என்ற கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத் துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

SCROLL FOR NEXT