நகோயா,
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில் சுருச்சி மற்றும் கமல்ஜீத் அடங்கிய இந்திய அணி துல்லியமாக இலக்கை நோக்கி சுட்டு அதிக புள்ளிகளை குவித்தனர். இதன் மூலம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையில் மேலும் ஒரு தங்கம் இணைந்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டி இந்தியாவுக்கு தொடர்ந்து பதக்கங்களை பெற்றுத்தரும் முக்கிய விளையாட்டாக இருந்து வருகிறது.
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் பெண்கள் கிரிக்கெட்டில் கிடைத்தது.