பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு கபடி: இந்திய ஆண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நகோயா,

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான கபடி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் தாய்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். சிறப்பான ரைடிங் மற்றும் தடுப்பாட்டத்தின் மூலம் தொடர்ந்து புள்ளிகளை குவித்த இந்தியா, ஆட்டத்தின் முடிவில் 66-28 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண உள்ளது.

SCROLL FOR NEXT