பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-

வாள்வீச்சு: பெண்களுக்கான சாப்ரே தனிநபர் பிரிவில் பவானி தேவி, காலை 8.15 மணி முதல்.

கபடி: ஆண்களுக்கான லீக் சுற்றில் இந்தியா- சீன தைபே, காலை 9.45 மணி, பெண்களுக்கான லீக் சுற்றில் இந்தியா-ஜப்பான். மாலை 4.15 மணி.

குத்துச்சண்டை: ஆண்களுக்கான 70 கிலோ பிரிவின் 2-வது சுற்றில் சுமித் (இந்தியா)-அல் சாரே அலி காசிம் (ஈராக்), காலை 10.30 மணி

ஆக்கி: ஆண்களுக்கான லீக் சுற்றில் இந்தியா -தென்கொரியா. பகல் 11.30 மணி.

ஜிம்னாஸ்டிக்ஸ்: பெண்களுக்கான வால்ட் இறுதி சுற்று, பிரனதி நாயக், பிற்பகல் 2.25 மணி.

தடகளம்: பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப், ஆஷா இளங்கோ, மாலை 4.14 மணி, பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம் இறுதி சுற்று, சீமா, மாலை 5.55 மணி.

SCROLL FOR NEXT