நகோயா,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-
தடகளம்: பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதி சுற்று, மன்பிரீத் கவுர், கிருஷ்ணா ஜெயசங்கர், மாலை 3.35 மணி, ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் அரைஇறுதி, குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர், மாலை 4.03 மணி. பெண்களுக்கான போல்வால்ட் இறுதி சுற்று, சிந்துஸ்ரீ கணேசா, பரணிகா இளங்கோவன், மாலை 4.41 மணி, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம் இறுதி சுற்று, குல்வீர் சிங். மாலை 5.02 மணி.
பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இந்தியா) பக்கபோன் தீராரட்சகுல்- பீராட்சி சுக்புன் (தாய்லாந்து), பிற்பகல் 1.30 மணி.
குத்துச்சண்டை: ஆண்களுக்கான 60 கிலோ 2-வது சுற்றில் சச்சின் (இந்தியா) முகமது அபு ஜஜே (ஜோர்டன்), காலை 10.15 மணி, பெண்களுக்கான 54 கிலோ 2-வது சுற்றில் பிரீத்தி (இந்தியா) வாங் சோல் மீ (வடகொரியா), பிற்பகல் 2.15 மணி.
ஆக்கி: பெண்களுக்கான லீக் சுற்றில் இந்தியா-ஜப்பான், காலை 7.30 மணி.
கபடி: பெண்களுக்கான அரைஇறுதியில் இந்தியா-நேபாளம், காலை 9.30 மணி, ஆண்களுக்கான அரைஇறுதியில் இந்தியா-தாய்லாந்து, காலை 10.45 மணி.
துப்பாக்கி சுடுதல்: 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) தனிநபர் தகுதி சுற்று, ஐஸ்வரி பிரதாப் சிங், ருத்ராங்ஸ், நீரஜ் குமார், காலை 7.15 மணி.
ஸ்குவாஷ்: கலப்பு இரட்டையர் கால்இறுதி வேலவன்- ஜோஸ்னா (இந்தியா)- டேவிட் பெலினோ-ஜெமிகா அரிபாடோ (பிலிப்பைன்ஸ்), காலை 7 மணி, ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி அபய் சிங் (இந்தியா) -ரைனோ சுகே சுகு (ஜப்பான்), காலை 9.15 மணி, பெண்கள் ஒற்றையர் கால்இறுதி அனாஹத் சிங்-தன்வி கண்ணா (இருவரும் இந்தியா). காலை 10 மணி, ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி வீர் சோத்ராணி (இந்தியா)-முகமது இர்பான் (கொரியா). காலை 10.45 மணி.
பளுதூக்குதல்: பெண்களுக்கான 61 கிலோ இறுதி சுற்று, செரம் நிருபமா தேவி. பிற்பகல் 1.30 மணி.