பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-

வில்வித்தை: ரிகர்வ் பெண்கள் தனிநபர் மற்றும் அணிகள் தகுதி சுற்று, கீர்த்தி, கும்கும். அங்கீதா, காலை 9 மணி. காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் தகுதி சுற்று. குஷல் தலால், சஹில் ஜாதவ், கணேஷ் மணிரத்னம், காலை 9 மணி.

தடகளம்: ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் இறுதிச் சுற்று. பிரவீன் சித்ரவேல், கார்த்திக் உன்னிகிருஷ்ணன். மாலை 5.05 மணி. பெண்கள் 400 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டி. கிரண், பிராச்சி, மாலை 6.15 மணி. ஆண்கள் 400 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டி, விஷால், மாலை 6.33 மணி. பெண்க ளுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் இறுதிச் சுற்று, பாருல் சவுத்ரி, பூஜா, இரவு 6.45 மணி.

குத்துச்சண்டை: ஆண்களுக்கான 55 கிலோ 2-வது சுற்று, ஜதுமணி சிங் (இந்தியா)-கார்லோ பாலம் (பிலிப்பைன்ஸ்), காலை 10.15 மணி, 90 கிலோ 2-வது சுற்று கபில் போக்காரியா (இந்தியா)- சாம் எஸ்தாகி (ஈரான்), பிற்பகல் 2.15 மணி, பெண்களுக்கான 60 கிலோ 2-வது சுற்று, பிரியா கங்ஹாஸ் (இந்தியா)- ஓ யோன்ஜி (தென்கொரியா). மாலை 5.45

ஆக்கி: ஆண்களுக்கான லீக் சுற்றில் இந்தியா-ஜப்பான், பிற்பகல் 1.30 மணி.

கபடி: பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான், காலை 9.30 மணி, ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான், பிற்பகல் 2.30 மணி.

துப்பாக்கி சுடுதல்: 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பெண்கள் தனிநபர் மற்றும் அணிகளுக்கான தகுதி சுற்று. திலோத்தம்மா சென், ஆஷி சாக்ஷி. விதர்சா. காலை 6.15 மணி.

SCROLL FOR NEXT