பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது.

டோக்கியோ,

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கியமான போட்டிகள் விவரம் வருமாறு:-

வில்வித்தை: காம்பவுண்ட் தனிநபர் தொடக்க சுற்று சஹில் ஜாதவ் (இந்தியா)- புரேவ்டோர்ஜி (மங்கோலியா), கணேஷ் மணிரத்னம் (இந்தியா)-அன்டாரு ரினால்டி (இந்தோனேசியா), அதிகாலை 4,45 மணி, பெண்களுக்கான தொடக்க சுற்று ஜோதி சுரேகா வென்னம் (இந்தியா)- அடெல் ஷிசென்பினோவா (கஜகஸ்தான்), காலை 9.45 மணி.

குத்துச்சண்டை: பெண்களுக்கான 75 கிலோ பிரிவின் கால்இறுதியில் லவ்லினா (இந்தியா)- சுயோன் சியோங் (தென்கொரியா), பிற்பகல் 1.30 மணி, 60 கிலோ கால்இறுதியில் பிரியா கங்ஹாஸ் (இந்தியா)- சமதோவா (தஜிகிஸ்தான்), பிற்பகல் 2.45 மணி, 90 கிலோ கால்இறுதியில் கபில் போக்காரியா (இந்தியா)- கிசாய் கிம் (தென்கொரியா), மாலை 3.45 மணி.

தடகளம்: பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதி சுற்று: சீமா, சன்யா யாதவ், பிற்பகல் 2.35 மணி, பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதி சுற்று: வித்யா ராம்ராஜ், அனு ராகவன், மாலை 3.53 மணி, ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்: சந்தோஷ்குமார் மாலை 4.03 மணி.

ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டம்: அவினாஷ் சாப்ளே, மாலை 4.13 மணி, ஈட்டி எறிதல் இறுதி சுற்று: ரோகித் யாதவ், யாஷ்வீர் சிங், மாலை 4.45 மணி. பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட் டத்தின் இறுதி சுற்று: சீமா, பாருல் சவுத்ரி, மாலை 5.13 மணி.

துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் தகுதி சுற்று: மனு பாக்கர், இஷா சிங், ராஹி சர்னோபாத், காலை 6.10 மணி முதல்.

SCROLL FOR NEXT