டோக்கியோ,
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-
வில்வித்தை: காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் அரையிறுதியில் இந்தியா-தென்கொரியா, அதிகாலை 5.55 மணி, காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியா-தாய்லாந்து, காலை 7.55 மணி, காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா-தென்கொரியா, காலை 10.55 மணி.
ஆக்கி: பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியா-தென் கொரியா, மாலை 3.30 மணி.
ஜூடோ: பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவில் தொடக்க சுற்று, அஸ்மிதா தேவ், காலை 7.30 மணி முதல்.
துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தனிநபர் தகுதி சுற்று, அனிஷ் பன்வாலா, காலை 6.10 மணி, டிராப் கலப்பு அணிகள் தகுதி சுற்று, நீரு தண்டா, கைனன் செனாய், காலை 6.30 மணி.
ஸ்குவாஷ்: பெண்கள் அணிகள் காலிறுதியில் இந்தியா-சிங்கப்பூர், காலை 6.30 மணி, ஆண்கள் அணிகள் காலிறுதியில் இந்தியா-குவைத் காலை 11 மணி.
மல்யுத்தம்: பெண்கள் 68 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று, நிஷா தாஹியா (இந்தியா) - பாக் சோல் கும் (வடகொரியா) காலை 7 மணி, ஆண்கள் கிரிகோ ரோமன் 87 கிலோ காலிறுதி, சுனில் குமார், காலை 7.45 மணி.
குத்துச்சண்டை: பெண்கள் 60 கிலோ அரையிறுதியில் பிரியா கங்ஹாஸ் (இந்தியா)-யாங் செங்யு (சீனா), காலை 10.15 மணி, பெண்கள் 75 கிலோ அரையிறுதியில் லவ்லினா (இந்தியா)-நாதல்யா போக்டனோவா (கஜகஸ்தான்), காலை 10.45 மணி, ஆண்களுக்கான 90 கிலோ அரையிறுதியில் கபில் போக்காரியா (இந்தியா)- துராபெக் கபிபுல் லாவ் (உஸ்பெகிஸ்தான்), பகல் 12 மணி.