பிற விளையாட்டு

24 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கம்... சாதனை படைத்த பூஜா

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நகோயா,

24 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று தந்து பூஜா சாதனை படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டு

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுத் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

மகளிர் உயரம் தாண்டுதல்

இதில், மகளிருக்கான உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில், 19 வயதான இந்திய வீராங்கனை பூஜா 1.84 மீட்டர் உயரத்தைத் தாண்டி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

2002-ல் பாபி அலோசியஸ் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, ஆசிய விளையாட்டின் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

இப்போட்டியில் உஸ்பெகிஸ்தானின் சைபுல்லேவா (1.90 மீ) தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் கிறிஸ்டினா ஓவ்சின்னிகோவா (1.87 மீ) வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

ஆண்கள் உயரம் தாண்டுதல்

முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

SCROLL FOR NEXT