பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: டெக்பாலில் இந்திய ஜோடி வெற்றி... வெண்கலப் பதக்க ஆட்டத்திற்கு தகுதி!

இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி, பிலிப்பைன்ஸின் ஜோஹானா அபுலென்சியா - பிரின்ஸ் அகஸ்டின் ஜோடியை எதிர்கொண்டது.

சென்னை,

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்பால் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

வெண்கலப் பதக்கம்

இந்தியாவின் குயின்சி ஜோகிம் டிசௌசா - முகமது அனாஸ் இம்ரான் பெக் ஜோடி, நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் 'ரிப்பேசார்ஜ்' சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி, பிலிப்பைன்ஸின் ஜோஹானா அபுலென்சியா - பிரின்ஸ் அகஸ்டின் ஜோடியை எதிர்கொண்டது.

2-0 என அபார வெற்றி

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

முதல் செட்டை 12-3 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2-வது செட்டிலும் சிறப்பாக விளையாடி 12-6 என வென்றது. இதன் மூலம் இந்திய ஜோடி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்துக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT