டோக்கியோ,
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 3 பொசிஷன்ஸ் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
திலோத்தமா சென், விதர்சா வினோத் கோச்சலும்கல் மற்றும் ஆஷி சௌக்ஷே ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1763 புள்ளிகள் குவித்து 2-வது இடத்தைப் பிடித்தது.
மேலும் திலோத்தமா சென் மற்றும் விதர்சா வினோத் ஆகிய இருவரும் தனிநபர் தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.