நகோயா,
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை அனாஹத் சிங் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதியில் சகநாட்டு வீராங்கனையான தன்வி கண்ணாவை எதிர்கொண்ட அனாஹத் சிங், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 11-2, 11-5, 11-3 என்ற புள்ளிக்கணக்கில் தன்வி கண்ணாவை வீழ்த்தி 3-0 என வெற்றி பெற்றார்.
அரையிறுதியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பானின் சடோமி வதனாபேவை அனாஹத் சிங் எதிர்கொள்கிறார்.