டோக்கியோ
ஆசிய விளையாட்டு மகளிர் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் போட்டியில் இந்தியாவின் சீமா குமாரி வெண்கல பதக்கம் வென்றார்.
அவர் 32 நிமிடங்கள் 50 வினாடிகள் ஓடி பந்தய தொலைவை அடைந்துள்ளார். யாவி என்பவர் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அவர் 32 நிமிடங்கள் 39 வினாடிகளிலும், 3-ம் இடம் பிடித்த தனகா 32 நிமிடங்கள் 41 வினாடிகளிலும் பந்தய தொலைவை அடைந்தனர்.
இதனால், தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இவர், ஒட்டுமொத்தத்தில் ஆசிய விளையாட்டில் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனையும் ஆவார்.