பிற விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு: நீச்சல் போட்டியில் வெள்ளி வென்று அசத்திய ரவி

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்க எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

ஐச்சி-நகோயா,

ஆசிய பாரா விளையாட்டு நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

வெள்ளிப் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (S13) நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ரவி புடிகினா 1 நிமிடம் 10.10 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த தொடரில் அவர் வெல்லும் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.

இப்போட்டியில் உஸ்பெகிஸ்தானின் எகோர் பொலோடோவ் 58.43 விநாடிகளில் இலக்கை அடைந்து, புதிய ஆசிய பாரா விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

58 ஆக உயர்வு

இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்க எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 தங்கம், 21 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

SCROLL FOR NEXT