ஐச்சி-நகோயா,
குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஹோகடோ ஹோடோஷே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர், வீராங்கனைகள் தடகளம், பாரா பளுதூக்குதல், துப்பாக்கிச் சுடுதல், மேசைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இதில் ஆண்களுக்கான (எப்56/எப்57 பிரிவு) குண்டு எறிதல் இறுதிப் போட்டியில் ஹோகடோ ஹோடோஷே 14.65 மீட்டர் தூரம் எறிந்து, 999 ரேசா புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்த அவர், இந்த முறை 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ள்ளார்.
இந்தப் போட்டியில் ஈரானின் யாசின் கோஸ்ராவி 15.25 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். சவுதி அரேபியாவின் ஹைதர் சலாம்கா 14.97 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
மற்றொரு இந்திய வீரரான சோமன் ரானா 13.80 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.