பிற விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு: ஈட்டி எறிதலில் அசத்திய நவ்தீப் சிங்... இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

மற்றொரு இந்திய வீரரான ரவி ரோங்காலி ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

ஐச்சி-நகோயா,

ஆசிய பாரா விளையாட்டு ஈட்டி எறிதலில் நவ்தீப் சிங் வெண்கலம் வென்றார்.

வெண்கலப் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்தவகையில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்40/41 பிரிவில் இந்தியாவின் நவ்தீப் சிங் 42.55 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஐந்தாவது இடம்

ஈரானின் பெயித் சாதேக் 45.78 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், இந்தோனேசியாவின் அன்சியாரி 43.55 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ரவி ரோங்காலி 31.64 மீட்டர் தூரம் எறிந்து ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

SCROLL FOR NEXT