பிற விளையாட்டு

ஆசிய பாரா டேபிள் டென்னிஸ்; ஜோர்டான் வீராங்கனையை வீழ்த்திய பவினா பட்டேல்

இதனால், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவரான பவினா, ஏ பிரிவில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

இர்பித்

ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜோர்டான் வீராங்கனையை பவினா பட்டேல் வீழ்த்தினார்.

ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன. இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டி ஒன்றில் இந்தியாவை சேர்ந்த பவினா பட்டேல் மற்றும் ஜோர்டான் வீராங்கனை பதேன் எலெய்மேட் மோதினர்.

இதில், 11-6, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் ஜோர்டான் வீராங்கனையை பவினா பட்டேல் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 17 நிமிடங்களில் போட்டி முடிவுக்கு வந்தது. இதனால், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவரான பவினா, ஏ பிரிவில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

SCROLL FOR NEXT