புதுடெல்லி,
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பந்தயத்தின்(3 நிலை) இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (362 புள்ளி) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மற்ற இந்திய வீரர்களான நீரஜ் குமார் (361.8) வெள்ளிப்பதக்கமும், அகில் ஷியோரன் (343.5) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் இந்திய அணி 1,769 புள்ளிகள் குவித்து தங்கப்ப தக்கத்தை வென்றது. ஜப்பான் அணி (1,754) வெள்ளிப்பதக்கத்தையும், கஜகஸ்தான் (1,748) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.